மாவட்ட செய்திகள் மே 21,2022 | 17:13 IST
கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி நெகமம்- ரங்கம்புதூர் மேடு பகுதியில் குதிரை பந்தயம் நடைபெற்றது. கோவை தெற்கு திமுக பொறுப்பாளர் வரதராஜன் துவங்கி வைத்தார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஐந்து பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. 400 மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது பந்தயத்தை மக்கள் ஆரவாரத்துடன் ரசித்தனர். வெற்றி பெற்ற குதிரை உரிமையாளர்களுக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. திமுக ஆட்சியின் ஒரு ஆண்டு கால சாதனையை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையிலேயே பந்தயம் நடத்தப்பட்டது.
வாசகர் கருத்து