மாவட்ட செய்திகள் மே 21,2022 | 18:36 IST
புதுச்சேரி, வாணரப்பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு முதியவர் ஒருவர் வந்தார். ரயில் நிலையத்தில் இருந்து, 20 அடி உயர மின் கம்பத்தில் ஏறி நின்றார். ரயில்வே போலீசார், முதியவரை கீழே இறங்க அறிவுறுத்தினர். அதை அவர் கண்டு கொள்ளவில்லை. தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. அவர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, முதியவரை மீட்டு, ஒதியஞ்சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த 70 வயது பாண்டுரங்கன் என்பதும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
வாசகர் கருத்து