மாவட்ட செய்திகள் மே 21,2022 | 20:33 IST
திருப்பூர், டவுன்ஹாலில் செல்வ விநாயகர் கோவில் முன் உதயநிதி ரசிகர்கள் புதிய படத்தின் பிளக்ஸ் பேனர் வைத்தனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். தினமலரில் செய்தி வெளியானது. உதவி கமிஷனர் செல்வநாயகம் அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஊழியர்கள் கோவிலை மறித்து வைக்கப்பட்ட 'பிளக்ஸ் பேனரை' அகற்றி, அருகே உள்ள பார்க்கில் வைத்தனர். இதையறிந்த, உதயநிதி ரசிகர்கள் இருவர் பார்க் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து, மிரட்டும் தோணியில் நடந்து கொண்டனர். போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து