Advertisement

ஆபத்தை உணராமல் ஆற்றில் மக்கள் பயணம்

மாவட்ட செய்திகள் மே 22,2022 | 00:00 IST

Share

திருப்பத்தூர் மாவட்டம் ,ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி நவம்பர்  மாதம்  வெள்ளத்தில் அடித்து சென்றது. நெடுஞ்சாலை துறையினர் ரூ. 20 லட்சத்தில் மணல் மூட்டைகள் மற்றும் பைப்களை அமைத்து தரைபாலத்தை சீரமைத்தனர். அதன் மூலம் சுற்றுவட்டார கிராம மக்கள் போக்குவரத்து மேற்கொண்டனர். தற்போது ஒருவாரமாக ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் ஆந்திராவில் பெய்த கனமழையால் சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்த நிலையில் ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் கிராம மக்கள் சிலர் ஆற்றின் நடுவே உள்ள  குடிநீர் குழாய்களின் மீது நடந்தும் டூவிலரில் பயணம் செய்கின்றனர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X