பொது மே 22,2022 | 18:36 IST
திருச்சி, மணச்சநல்லூர் அருகே எதுமலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். 13 ஆண்டுக்கு முன் சென்னையில் காதல் திருமணம் செய்து கொண்டார். காலம் காலமாக இந்த ஊர் பஞ்சாயத்தார் காதல் திருமணம் செய்தவர்களை ஒதுக்கி வைக்கின்றனர். அதேபோல, ஜெகதீசன் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். தற்போது நடக்கும் கோயில் திருவிழாவில் ஜெகதீசன் குடும்பத்தினரிடம் ஊர் பெரியவர்கள் வரி வாங்க மறுத்தனர். ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளதால் திருவிழாவுக்கு வரக்கூடாது எனவும் ஊர் பெரியவர்கள் கூறினர். இதுகுறித்து ஜெகதீசன் அண்ணன் ரமேஷ் சிறுகனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் வரியை வாங்க ஊர் பெரியவர்கள் மறுத்தனர். இதையடுத்து ஊர் பெரியவர்கள் சின்னச்சாமி, மாயவன், சிவலிங்கம் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து