பொது மே 22,2022 | 20:43 IST
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது. அதேநேரத்தில் பொது இடங்களில் துணிப்பை கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. இதனால் மக்களுக்கு எளிதில் மஞ்சப்பை கிடைக்கும் விதமாக, சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை எடுத்தது. சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹு முயற்சியின் பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி இணைந்து மஞ்சப்பை எந்திரத்தை வடிவமைத்துள்ளன. பஸ், ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விரைவில் இந்த மஞ்சப்பை வழங்கும் எந்திரங்களை நிறுவ அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். முதல் கட்டமாக, கோயம்பேடு பஸ் நிலையத்தில் மஞ்சபை எந்திரங்கள் வைக்கப்படவுள்ளன. 10 ரூபாய் நாணயத்தை போட்டால் ஒரு மஞ்சப்பையை எந்திரம் வழங்கும் என சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு செயல்விளக்கம் செய்து காட்டினார். 400 மஞ்சபைகளை அடுக்கி வைக்கும் வகையில் எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவிரைவில் எந்திரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:
மேலும் 1 கருத்துக்கள்...