மாவட்ட செய்திகள் மே 23,2022 | 15:25 IST
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு க தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து 5 தினங்களாக பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர், சிவனடியார்கள் கனகசபை மீது ஏறி தேவாரம் பாட தீட்சிதர்கள் தடை விதித்த நிலையில், இன்று சிவனடியார்கள் கனகசபை மீது ஏறி தேவாரம் பாடினர்.. தெய்வத் தமிழ் பேரவை மற்றும் தமிழ் ஆன்மீக பேரவை சார்பில் கனகசபை மீது ஏறிய சிவனடியார்கள் மேளம் தாளத்துடன் நடனமாடிய படி, தேவாரம் பாடி நடராஜரை வழிபட்டனர்.
வாசகர் கருத்து