பொது மே 24,2022 | 08:38 IST
2016 முதல் டெல்லி கவர்னராக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனில் பைஜால் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதாக சொல்லபடுகிறது. டெல்லியின் புதிய கவர்னராக காதி கமிஷன் தலைவர் வினய்குமார் சக்சேனாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். புதிய கவர்னரை மாநில மக்கள் சார்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். டெல்லி வளர்ச்சிக்காக கவர்னருக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து