பொது மே 24,2022 | 09:41 IST
டெல்லி ராஜ்யசபா அலுவலகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள், உதவியாளர்கள் என 1,300 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு 2018ல் பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இடையில் கோவிட் தொற்று பரவலால், 2020 மார்ச் மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அனைவரும் பழைய முறைப்படி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வந்தனர். இந்நிலையில், ஜூன் 1 முதல் மீண்டும் பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ் முறை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பரிசோதனை முயற்சியும் துவங்கி உள்ளது.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: