Advertisement

வன்முறையாக மாறிய போராட்டம் அமைச்சர், எம்எல்ஏ வீடுகளுக்கு தீ

பொது மே 25,2022 | 08:26 IST

Share

ஆந்திராவில் ஏற்கனவே இருந்த 13 மாவட்டங்களை பிரித்து, கூடுதலாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அமலாபுரத்தை தலைநகராக கொண்டு கோணசீமா என்ற புது மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்கும்படி கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று 'அம்பேத்கர் கோணசீமா' என்ற புதிய பெயர் சூட்டப்படும் என அரசு அறிவித்தது. ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமலாபுரத்தில் இருந்து பேரணி சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தனர். போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தும் பேரணி நடந்தது. அவர்களை போலீசார் தடுத்தபோது மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன. போலீசார் பலர் காயமடைந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ஒரு காலேஜ் பஸ், 4 அரசு பஸ்களுக்கு தீ வைத்தனர். அமைச்சர் விஸ்வரூப், எம்எல்ஏ சதீஸ் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டதால் அமலாபுரத்தில் பல இடங்கள் போர்க்களம் போல் மாறியது. பொது சொத்துக்களை சேதப்படுத்திய இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பதட்டத்தை தணிக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Columbus
Columbus , . 25-மே-2022 | 08:54:31 IST Report Abuse

Ceylon model

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X