மாவட்ட செய்திகள் மே 25,2022 | 00:00 IST
தருமபுரி பஸ் ஸ்டாண்ட் அருகில் 11 கடைகள் கொண்ட வணிக வளாகம் உள்ளது. தருமபுரி பகுதியை சேர்ந்தவர் 35 வயது செந்தில்குமார். இங்கு கம்ப்யூட்டர் , பிரின்டிங் கடை வைத்து உள்ளார். இன்று காலை வழக்கம் போல கடைகளை திறந்த போது, கல்லா உடைக்கப்பட்டு ரூ.2 லட்சம் திருடு போயிருந்தது. இதே போல் இரும்பு கடை வைத்து இருக்கும் இமான் கடையில் ரூ.33 ஆயிரம், தருமபுரியை சேர்ந்த மாது கடையில் ரூ.50 ஆயிரம், என 5 கடைகளில் ரூ. 5 லட்சம் ரூபாய் அளவிற்கு பொருட்கள் திருடு போனது. தருமபுரி போலீஸ் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து