Advertisement

மீனவ பெண் கொலையில் பகீர்! ஒடிசா வாலிபர்கள் 2 பேர் கைது

பொது மே 27,2022 | 15:29 IST

Share

ராமேஸ்வரம் அருகே வடகாடு கிராமத்தை சேர்ந்த மீனவ பெண் சந்திரா, 24ம் தேதி கடல் பாசி சேகரிக்க சென்றார். அவரை கிராம மக்கள் பிணமாக மீட்டனர். மர்ம நபர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இறால் பண்ணையில் வேலை பார்த்த ஒடிசா வாலிபர்கள் தான் இக்கொலையை செய்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். போராட்டமும் நடத்தினர். ஒடிசா வாலிபர்கள் 6 பேரை பிடித்து, 3 நாட்களாக போலீசார் விசாரித்தனர். தங்களுக்கு எதுவும் தெரியாது என 6 பேரும் மறுத்தனர் அவர்களில் 30 வயதான ரஞ்சன் ராணாவும், 22 வயதான பிரகாசும் சந்திராவின் நகைகளுடன் ராமேஸ்வரம் அடகு கடைகளில் ஏறி இறங்கிய தகவல் போலீசுக்கு கிடைத்தது. தங்கள் பாணியில் விசாரித்தனர். 2 பேரும் உண்மையை கக்கினர். கொலை நடந்த அன்று கடல் பாசி சேகரிக்க சந்திரா தனியாக சென்றுள்ளார். அவரை விரட்டி சென்று பலவந்தப்படுத்தி கூட்டாக கற்பழித்தனர். சந்திராவின் சேலையால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றனர். அவரின் தாலி, நகைகளை எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் அடகு கடைகளில் விற்க முயன்றனர். யாரும் வாங்கவில்லை. ரஞ்சன், பிரகாஷ் தவிர மற்ற 4 பேரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என தொடர்ந்து மறுக்கின்றனர். அவர்களிடம் விசாரணை நடப்பதாக போலீசார் கூறினர். ரஞ்சன், பிரகாஷ் மீது கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

KayD
KayD , . 27-மே-2022 | 21:01:23 IST Report Abuse

பாவம் ஓரிடம் பழி ஓரிடம்

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X