மாவட்ட செய்திகள் மே 27,2022 | 18:59 IST
தென் தமிழக அளவில் முதல் முறையாக மதுரை கோர்ட் அருகே மடீட்சியா அரங்கில் மடீட்சியா மற்றும் பிக்சல் போட்டோ அண்ட் வீடியோ சார்பில் போட்டோ, வீடியோ கண்காட்சி தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 5 லட்சம் ஃபோட்டோகிராபர்கள் பயன் பெரும் வகையில் நடக்கும் இக்கண்காட்சியில் முன்னணி கேமிரா தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 100 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. முன்னணி ஃபோட்டோகிராபர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சிறந்த புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இக்கண்காட்சி வரும் 29 ம் தேதி வரை தினமும் காலை 9 முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
வாசகர் கருத்து