மாவட்ட செய்திகள் மே 28,2022 | 00:00 IST
பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (28) , திருவாரூர் வடக்கு சேத்தி பகுதி விஏஓவாக உள்ளார். இவரது மனைவி அரியலூர் மாவட்டம், நம்மங்குணம் கோவிந்தராஜ் மகள் தமிழ்லெட்சுமி (20). இவர்களுக்கு 2021ல் திருமணம் நடைபெற்றது. இருவரும் திருவாரூர் காட்டூர் முதலியார் தெருவில் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் தமிழ்லெட்சுமி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பெண்ணின் தந்தை கோவிந்தராஜ் திருவாரூர் போலீசில் கணவன் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து