பொது மே 28,2022 | 21:41 IST
கரூர் மகாலட்சுமி நகரில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. இதற்கு பூமி பூஜை போட்டவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. கால்வாய் கட்டி முடிக்கப்பட்ட 25 நாட்களுக்குள் கரூரில் மழை பெய்தது. புதிய கால்வாயில் தண்ணீர் ஓடியது. ஒரு மழைக்கே கால்வாய் தாங்கவில்லை. 150 அடி தூரத்துக்கு கால்வாய் உடைந்து நொறுங்கியது. . தரமற்ற முறையில் கால்வாய் கட்டியுள்ளனர். விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: