Advertisement

திருமணத்துக்கு மறுத்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கள்ளக்காதலன்

பொது மே 28,2022 | 23:00 IST

Share

ஐதராபாத் கஞ்சன் பாக் பகுதியைச் சேர்ந்தவர் சையத் நூர் பானு வயது 45. கணவர் இறந்து விட்டார். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் தனியாக வசித்தார். அதே பகுதியை சேர்ந்த ஹபீப் என்பவருடன் பானுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஹபீப் கேட்டார். 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டேன்; இனி 2வது திருமணம் செய்தால் நன்றாக இருக்காது என பானு கூறினார். அதை ஹபீப் ஏற்கவில்லை. தொடர்ந்து நச்சரித்தார். இதனால் ஹபீப்பை விட்டு விலகிய பானு, கடந்த ஆண்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஹபீப்பை கைது செய்தனர். இருவருக்கும் சமரசம் செய்து வைத்தனர். அதன்பிறகும் பானுவுக்கு ஹபீப் தொல்லை கொடுத்தார். அவரை பானு சட்டை செய்யவில்லை. இந்நிலையில், பரபரப்பான சாலையில் நடந்து சென்ற பானுவை பின்தொடர்ந்து சென்று அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். மருத்துவமனையில் பானுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிசிடிவி வீடியோ அடிப்படையில் ஹபீப்பை போலீசார் தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X