பொது மே 29,2022 | 06:49 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் ராகவன், வனஜா தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். மீண்டும் வனஜா கர்ப்பம் தரித்தார். 3வது ஆண் குழந்தை வேண்டும் என விரும்பினர். இதற்காக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என அறிய ஆசைப்பட்டனர். தருமபுரியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற ஆட்டோ டிரைவர், நவீன மொபைல் ஸ்கேன் மூலம் கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை சொல்வதை அறிந்தனர். அவரிடம் சென்றனர். சட்டவிரோதமாக ஸ்கேன் செய்தார். பெண் குழந்தை இருப்பதாக வெங்கடேசன் சொன்னார். 20 ஆயிரம் தந்தால் கருவை கலைத்துவிடலாம் என்றும் கூறினார். அடுத்தமுறை பணத்துடன் வந்த வனஜாவை தருமபுரி அடுத்த அழகாபுரியை சேர்ந்த கற்பகம் என்ற நர்ஸ் வீட்டுக்கு வெங்கடேசன் அழைத்து சென்றார். எவ்வித பாதுகாப்பும் இன்றி அரைகுறையாக கருச்சிதைவு செய்யப்பட்டது. வீடு திரும்பிய வனிதாவுக்கு வயிறு வலி ஏற்பட்டது. கிருஷ்ணகிரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை வார்டில் உள்ளார். வெங்கடேசன் மீது போலீசில் ராகவன் புகார் அளித்தார். வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அப்போது வெங்கடேசன் வீட்டில் 6 கர்ப்பிணிகள் இருந்தனர். குழந்தையின் பாலினம் அறிய சட்டவிரோதமாக ஸ்கேன் செய்து கொள்ள வந்த அந்த பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அவருக்கு உடந்தையாக இருந்த நர்ஸ் கற்பகம், திருப்பத்தூர் ஜோதி, சதீஷ்குமார், சுதாகர், பாப்பாரப்பட்டி சரிதா, பாரதிபுரம் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து