Advertisement

அலுவலக வாசலில் அமர்ந்து மனு பெற்ற கலெக்டர்

மாவட்ட செய்திகள் மே 29,2022 | 15:23 IST

Share

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதம்தோறும் கலெக்டர் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கும். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்து மனு தருவர் . கடந்த மாதங்களில் இரண்டாவது தளத்தில் நடந்த கூட்டம், தற்போது தரைதளத்திற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . கூட்டத்துக்கு வந்த மாவட்ட கலெக்டர் வினீத் விவசாயிகளை நாற்காலியில் அமருமாறும் கூடுதல் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார் . அதனை ஏற்காத விவசாயிகள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் கோபமடைந்த கலெக்டர் கூட்டரங்கில் இருந்துவெளியேறினார். விவசாயிகள் தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து கலெக்டர் விவசாயிகளிடம் மனுக்களை பெற்றார். . ஒரு பிரிவு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மற்றொரு பிரிவு விவசாயிகள் மனுக்களை அளித்தனர். இதனால் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X