Advertisement

திருக்கடையூரில் செய்தியாளர்களை தாக்கிய போலீஸ்

மாவட்ட செய்திகள் மே 31,2022 | 15:26 IST

Share

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு மற்றும் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணிகள், இயந்திர குறுவை நடவு ஆகியவற்றை முதல்வர் ஆய்வு செய்தார். திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு புகைப்பட கண்காட்சியும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. செய்தியாளர்கள் படம் எடுக்க தடுக்கப்பட்டனர். கலைஞர் தொலைக்காட்சி மற்றும் தினகரன் பத்திரிகைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் முதல்வருடன் வந்திருக்கும் ஊடகத்துறையினர் செய்திகளை சென்னைக்கு அனுப்பி விடுவார்கள் என தெரிவித்தனர். தடையை மீறி படம் எடுக்க முயன்ற உள்ளூர் பத்திரிகையாளர்களை போலீசார் கீழே தள்ளிவிட்டனர். இதனால் பத்திரிகையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X