Advertisement

வியாபாரியிடம் நூதன முறையில் 5 கிலோ நகைகள் கொள்ளை

மாவட்ட செய்திகள் ஜூன் 01,2022 | 00:00 IST

Share

சென்னையை சேர்ந்தவர் மணி (52). நகை மொத்த வியாபாரி. கடைகளுக்கு நகைளை கொடுப்பது வழக்கம். இவர் சென்னையிலிருந்து தஞ்சை கடைகளுக்கு நேற்று நகைகளை கொடுத்துள்ளார். இரவு சாப்பிட பழைய பஸ்ஸ்டாண்டில் ஒரு உணவகத்திற்கு சென்றார். அங்கு நகை பையை வைத்து விட்டு உணவிற்கு பணம் கொடுத்துள்ளார். அப்போது அவரை சுற்றி சீருடை அணிந்த சிலர் நின்றுள்ளனர். பணம் கொடுத்துவிட்டு பார்த்த போது, நகைப்பையை காணவில்லை. சீருடையில் இருந்தவர்களையும் காணவில்லை. உணவகத்தில் நகைப்பையை தேடி பார்த்தார். பை கிடைக்கவில்லை. பையில் 5 கிலோ நகைகள் இருந்துள்ளது. தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X