Advertisement

விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறுத்தம்

மாவட்ட செய்திகள் ஜூன் 01,2022 | 22:09 IST

Share

தமிழகம் முழுவதும், இன்று, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள மையங்களில் பணியாற்றலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தஞ்சை முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை, பட்டுக்கோட்டைக்குச் செல்ல கூறி ஒருமையில் பேசியுள்ளார் இதனால், அதிருப்தியடைந்த ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பட்டுக்கோட்டை, கும்பகோணம் மையத்திலும், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், விடைத்தாள் திருத்தம் பணி பாதிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X