Advertisement

திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

மாவட்ட செய்திகள் ஜூன் 04,2022 | 00:00 IST

Share

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. கோயிலின் தீமிதி திருவிழா கடந்த மாதம் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் மகாபாரதம் சொற்பொழிவு நடந்தது. கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் சிறப்பு அபிஷேகமும் இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலாவும் நடந்தது. இன்று தீமிதி திருவிழா நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள கணேஷ் பூசாரி பூங்கரகத்துடன் முதலில் தீமிதித்தார். பின்பு ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடனை செலுத்தினர். இரவு அம்மன் வீதி உலா வர அம்போகம் விழா நடந்தது. நாளை மஞ்சள் நீர் உற்சவமும் நாளை மறுநாள் பட்டாபிஷேகமும் நடக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X