Advertisement

கட்டட காடுகளாக மாறி வரும் நீலகிரி! இன்று உலக சுற்றுச்சூழல் தினம்!

மாவட்ட செய்திகள் ஜூன் 05,2022 | 00:00 IST

Share

பல்லுயிர் வாழ்விடமான நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளது. ஆனால் இன்று நீலகிரியில் சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்பட்டு குளிர் காற்று வீசும் இடத்தில் வெப்ப காற்று வீசுகிறது. அடர்ந்த காடுகளை அழித்து தேயிலை தோட்டங்களை உருவாக்கினர். தேயிலை தோட்டங்களை அழித்து கட்டிடங்களை எழுப்பி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பொக்லின்களை பயன்படுத்தி பாறைகள் உடைப்பதும், மண் அள்ளுவதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகள் என அறிவிக்கப்பட்ட 283 இடங்களில் விதிமீறிய கட்டடங்கள் புற்றீசல் போல் பெருகி வருவதை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். சுற்றுச்சூழல் தினமான இன்று நீலகிரி உள்ளிட்ட வனச் சோலைகள் துண்டாடப்படுவதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும், என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X