மாவட்ட செய்திகள் ஜூன் 08,2022 | 00:00 IST
புதுச்சேரி வேளாண் துறை தொழிலாளர்கள், பணி நிரந்தரம், நிலுவை சம்பளம் கோரி போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் இன்று காலை உழவர் சந்தை திறக்கப்படவில்லை. அங்கு காய்கறிகளை கொண்டு வந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். எங்கு சென்று விற்பது என குழப்பம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விவசாயிகள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் செய்தனர். ஊழியர்கள் போராட்டத்தால் விளைபொருட்கள் வீணாவதாக குற்றம் சாட்டினர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து