Advertisement

லாரி - கார் மோதலில் இருவர் பலி

மாவட்ட செய்திகள் ஜூன் 08,2022 | 00:00 IST

Share

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடி அடுத்த மேனம்பரம்பிள் ஹவுசைச் சேர்ந்தவர் ஷாஜி, 52; பத்திரிகை போட்டோகிராபர். இவரது மனைவி சுமிதா, 42. இடுக்கி மாவட்டம், வளியகாலயில் ஹவுஸ் சக்குபள்ளத்தைச் சேர்ந்தவர் தாமஸ் மகன் ஆபிரகாம், 26; கார் டிரைவர். மூவரும் நேற்று 'இன்னோவா' காரில் கேரளாவில்  இருந்து சென்னைக்கு வந்தனர். விழுப்புரம் மாவட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இதில், கார் டிரைவர் ஆபிரகாம் அதே இடத்தில் இறந்தார். டிரைவருக்கு பக்கத்தில் அமர்ந்த ஷாஜி பின் சீட்டில் அமர்ந்து வந்த சுமிதா இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஷாஜி இறந்தார். காரில் 'ஏர்பேக்' வசதி இல்லை. திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X