Advertisement

கோயில்களில் களைகட்டிய வைகாசி விசாக தேரோட்டம்

பொது ஜூன் 12,2022 | 14:22 IST

Share

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் விமர்சையாக நடந்தது. சுந்தரவல்லி தாயாருடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளிய தேரை பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் வடம் பிடித்து துவக்கி வைத்தார். திருச்சி மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில், பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோயில், துறையூர் அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், தொட்டியத்தில்  அமைந்துள்ள திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் கோயில் தேரோட்டத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் திருராமேஸ்வரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த  ராமநாதசுவாமி கோயில் தேரோட்டம் விமர்சையாக நடந்தது. மங்களாம்பிகை சமேத ஸ்ரீ இராமநாதசுவாமி தேரில் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் அருகில் உள்ள குளத்தில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X