Advertisement

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

மாவட்ட செய்திகள் ஜூன் 13,2022 | 15:06 IST

Share

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோனேரி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலின் கோபுரங்கள் புதிதாக கட்டப்பட்டு, தெய்வங்களுக்கு புதிய சிலைகள் மற்றும் விக்ரகங்கள் செய்யப்பட்டன. 2 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆன  11 அடி உயரமுள்ள அபயவரத ஆஞ்சநேயர் சிலையும் நிறுவப்பட்டது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து புனித நீர் எடுத்து வந்து வேத மந்திரங்கள் முழங்க மூன்று கால யாக வேள்வி நடத்தப்பட்டது. தொடர்ந்து  கலசங்கள் மற்றும் கருவறை தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது .  திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X