Advertisement

உலக ரத்ததான விழிப்புணர்வு நடை பயணம்

மாவட்ட செய்திகள் ஜூன் 14,2022 | 00:00 IST

Share

ஆண்டுதோறும் ஜூன் 14 ந் தேதி உலக ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தஞ்சாவூர் தனியார் மருத்துவமனை மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தஞ்சையில் உலக ரத்ததான தினம் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. நடை பயண விழிப்புணர்வு பேரணியை தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, செஞ்சிலுவை சங்க ஆலோசகர் மருத்துவர் வரதராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணியில் மக்களிடம் ரத்ததானம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கல்லூரி மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் எடுத்துச் சென்றனர். பேரணியில் கூடுதல் எஸ்பி பிருந்தா உள்ளிட்ட மருத்துவர்கள் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X