Advertisement

தி.மலையில் கருணாநிதி சிலை அமைக்க தடை நீங்கியது!

மாவட்ட செய்திகள் ஜூன் 14,2022 | 20:40 IST

Share

திருவண்ணாமலை, வேங்கைக்கால் பகுதியில் ஜீவா அறக்கட்டளை சார்பில் கருணாநிதி சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கார்த்திக், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். சிலை அமையும் பகுதி கால்வாய் அருகில் வருகிறது. அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலை கட்டப்படவுள்ளதாக தெரிவித்தார். அவரது மனுவை ஏற்ற கோர்ட், சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தது. தடையை நீக்க ஜீவா அறக்கட்டளை, திருவண்ணாமலை திமுக சார்பில் மனு செய்யப்பட்டது. ஐகோர்ட் நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சிலை அமையவுள்ள இடத்திற்கு ஏற்கெனவே பட்டா உள்ளது. பட்டா வழங்கியதை எதிர்த்துதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனால், கருணாநிதி சிலை பிரச்சனை முடிவுக்கு வந்தது


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X