Advertisement

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

பொது ஜூன் 15,2022 | 13:58 IST

Share

சத்தீஸ்கர் மாநிலம் ஜான்ஜீர் சம்பா(Janjgir-Champa) மாவட்டம்,  பிக்ரிட்(Pihrid) கிராமத்தை சேர்ந்தவர் லாலா ராம் சாகு. 11 வயது மகன் ராகுல் சாகு, கடந்த 10ம் தேதி, வீட்டின் பின்புறம் நீர் வற்றி கிடக்கும் 80 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேரம் கடந்ததால் மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரும் மீட்பு பணியில் இணைந்தனர். சிறுவன் 60 அடி ஆழத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டு சுவாசத்துக்கு தேவையான ஆக்சிஜன், குழாய் மூலம் வழங்கப்பட்டது. அதிகாரிகள், மீட்பு படையினர் என சுமார் 150 பேர் முயற்சியின் பலனாக 104 மணி நேரத்துக்கு பின் சிறுவன் ராகுல் உயிருடன் மீட்கப்பட்டான். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் சிக்கியவரை பத்திரமாக மீட்டதில் இதுவே அதிக நேரம் நடந்துள்ள மீட்பு பணி. 2006ல் ஹரியானாவில் சிறுவனை மீட்க 50 மணி நேரம் நடந்த மீட்பு பணியே அதிக நேரமாக இருந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X