Advertisement

கலால் துறை ஏலம் துவங்கியது

மாவட்ட செய்திகள் ஜூன் 16,2022 | 15:17 IST

Share

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கலால்துறை கீழ் 113 சாராயக்கடைகள், 92 கள்ளுக்கடைகள் உள்ளன. இக்கடைகளை நடத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது. 3 ஆண்டு கால குத்தகை விடப்பட்டாலும், கடை உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீத கிஸ்தி தொகை கலால் துறைக்கு உயர்த்தி கொடுத்து, தொடர்ந்து கடையை நடத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடைகள் மீண்டும் ஏலத்திற்கு வந்துவிடும். கடந்தாண்டு ஏலம் எடுத்தவர்கள், இந்தாண்டு 5 சதவீத கிஸ்தியை உயர்த்தி கொடுத்து கடைகளை நடத்தாமல் வெளியேறியுள்ளனர். இதனால் 81 சாராயக்கடைகள் மீண்டும் ஏலத்திற்கு வந்ததன. ஏலத்தை கலால்துறை துணை ஆணையர் சுதாகர், ஏலத்தை தொடங்கி வைத்தார். இன்றும், நாளையும் ஏலம் நடக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X