Advertisement

கஞ்சா போதையில் நண்பர் கொலை

மாவட்ட செய்திகள் ஜூன் 16,2022 | 17:16 IST

Share

திருச்சி பள்ளக்காடு தோகைமலையை சேர்ந்தவர் செல்லாமாரி, வயது 19. பெயின்ட்டராக வேலை பார்த்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தாயனுாரை சேர்ந்த அகிலா, வயது 21 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்றிரவு தாயனுார் வயல் காட்டில் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து செல்லாமாரி மது அருந்தினார். கஞ்சா புகைத்தனர். அப்போது போதையில் இருந்த நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கொதிப்படைந்த நண்பர்கள் செல்லாமாரியை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்து தப்பினர். சோமரசம்பேட்டை போலீசார் கொலைகார நண்பர்களை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X