மாவட்ட செய்திகள் ஜூன் 22,2022 | 17:10 IST
புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குடபட்ட ஏரிப்பாக்கத்தில் காளி கோயில் அருகே உள்ள குளத்தை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது. பணியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனர். புதர் ஒன்றை வெட்ட முற்பட்டபோது அதிலிருந்த விஷ குளவிகள் ஒரே நேரத்தில் வெளியில் வந்து அங்கு பணி செய்தவர்களை கொட்டியது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணை சபாநாயகர் ராஜவேலு ஆறுதல் கூறினார்.
வாசகர் கருத்து