Advertisement

வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய 5 பேர் கைது

மாவட்ட செய்திகள் ஜூன் 22,2022 | 19:22 IST

Share

மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் பெஸ்ட் ப்யூச்சர் ஆஃப் இந்தியா என்ற பெயரில் நிறுவனம் இயங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களில் ரூ 15,000 சம்பளத்தில் கால் சென்டர் மற்றும் சூப்பர்வைசர் வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி 100 பெண்கள் தலா ரூ.3000 அட்வான்ஸ் செலுத்தியுள்ளனர். 2 மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து வேலை வேண்டாம். கட்டிய பணத்தை திருப்பி தாருங்கள் என பெண்கள் கேட்டனர். நிறுவனத்தை நடத்தி வருபவர்கள் பணத்தை தர முடியாது என்று கூறி திட்டினர். பாதிக்கப்பட்டவர்கள் மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முன் மறியல் ஈடுபட்டனர். இதனையடுத்து நிறுவன நிர்வாகிகள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X