Advertisement

விழுப்புரத்தில் ஓபிஎஸ் படம் பெயர் அழிப்பு

மாவட்ட செய்திகள் ஜூன் 24,2022 | 00:00 IST

Share

2020ல் செய்யப்பட்ட சட்ட திருத்தங்களுக்கு, நேற்றைய அதிமுக பொதுக்குழுவில் அனுமதி பெறாததால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் இன்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்த கட்சி பேனர்கள் மற்றும் அப்பகுதியில் சுவர் விளம்பரங்களில் இடம்பெற்ற ஓ.பன்னீர்செல்வம் படம் மற்றும் அவரது பெயரை, சண்முகத்தின் ஆதரவாளர்கள் வெள்ளையடித்து, அழித்தனர். நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என, பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் இன்று மனு கொடுத்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் படம் மற்றும் அவரது பெயரை அழித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X