Advertisement

பட்டாசு குடோன் வெடி விபத்து பலி 4 ஆக உயர்வு

மாவட்ட செய்திகள் ஜூன் 24,2022 | 00:00 IST

Share

கடலூர் அருகே பெரியகாரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். எம்.புதுார் கிராமத்தில் நாட்டு பட்டாசு தயாரித்து, விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த பட்டாசு குடோனில் நேற்று திடீரென தீப்பிடித்து, நாட்டு வெடிகள் மற்றும் வான வெடிகள் வெடித்து சிதறியது. குடோனும் தரைமட்டமானது. பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெரியகாரைக்காடு சித்ரா, 37; வான்பாக்கம் அம்பிகா, 50; நடுவீரப்பட்டு சத்தியராஜ், 32; ஆகியோர் உடல் சிதறி இறந்தனர். நெல்லிகுப்பம் வசந்தா, 45; மற்றும் பட்டாசு வாங்க வந்திருந்த வைத்திலிங்கம் பலத்த காயமடைந்தனர். தீயணைப்பு படையினர், காயமடைந்த வசந்தா, வைத்திலிங்கம் இருவரையும் கடலுார் மருத்துவமனையில் சேர்த்தனர். வசந்தா இன்று இறந்தார். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X