பொது ஜூன் 25,2022 | 16:26 IST
கோவை, ஆவின் தலைமை பால் நிறுவனத்தில் பால்வள அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். ரூ.90 லட்சம் மதிப்பிலான பால் பொருட்களை பணம் வாங்காமல் விற்றுள்ளதை கண்டுபிடித்தார். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார். துறைரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விற்பனை அதிகாரிகள் சுஜித்குமார், சுப்பிரமணியம் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து