அரசியல் ஜூன் 25,2022 | 18:23 IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். நீரழிவால் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் 3 விரல்கள் ஆபரேஷன் மூலம் எடுக்கப்பட்டது. விஜயகாந்த் நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாகக் கூறி சில யூடியூப் சேனல்கள் வதந்திகளை பரப்பின. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
வாசகர் கருத்து