பொது ஜூன் 25,2022 | 20:29 IST
மிழகத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக, கோவையில் அதிக பாதிப்பு பதிவாகிறது. தினசரி தொற்று 100ஐ நெருங்குகிறது. கோவையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் சமீரன் அறிவித்துள்ளார். சமூக இடைவெளி உள்ளிட்ட கோவிட் விதிமுறைகளை கடைபிடிப்பதும் அவசியம். கோவிட் டெஸ்ட் எடுப்பதை அதிகரிக்கவும், சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
வாசகர் கருத்து