Advertisement

சுகாதார மையத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு

மாவட்ட செய்திகள் ஜூன் 25,2022 | 20:37 IST

Share

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு அரசு துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் உள்ள சிகிச்சைக் கூடங்கள் மற்றும் ஆய்வகங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுவதை பார்வையிட்டார். நலவாழ்வு மையத்திற்கு அருகாமையில் உள்ள நோயாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, விசாரித்து, வீடு தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கினார். தமிழக அமைச்சர்கள் சுப்பிரமணியன், மஸ்தான், நலத்துறை முதன்மை செயலர் செந்தில்குமார், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X