மாவட்ட செய்திகள் ஜூன் 26,2022 | 00:00 IST
நெல்லை தாமிர பரணி ஆற்றின் வடக்கு பகுதியில் செப்பறை அழகிய கூத்தர் கோயில் உள்ளது. இங்கு மூலவராக ஸ்ரீ நெல்லையப்பா் சமேத காந்திமதி அம்பாள் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள நடராஜா் சன்னதி தாமிர சபை என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கலச பூஜையுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கொடிப்பட்டம் சன்னதியை சுற்றி வந்து கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. கொடி மரத்திற்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வர்.
வாசகர் கருத்து