Advertisement

நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் படுகாயம்

மாவட்ட செய்திகள் ஜூன் 26,2022 | 00:00 IST

Share

கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் காசிப்பிள்ளை, 31, விவசாயி. இவரது மனைவி சாந்தகுமாரி, 21. தனது குடும்பத்தினருடன் தனது நிலத்தில் வசித்து வருகிறார். நேற்றுமுன்தினம் வெளியூருக்கு சென்ற காசிப்பிள்ளை, இரவு வீட்டிற்கு வந்தார். அதன்பின் இரவு 11:30 மணிக்கு வீட்டு வாசல் முன் சாந்தகுமாரி சாப்பாடு பரிமாறினார். அவ்வழியாக முயல் வேட்டைக்கு சிலர் சென்றுள்ளனர். காசிப்பிள்ளை சாப்பிட்டு கொண்டிருந்தபோது, சாந்தகுமாரி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். திடீரென நாட்டு துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டது. நாட்டு துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு சாந்தகுமாரி மீது பாய்ந்தது. இதில், ரத்தவெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அறுவை சிகிச்சைக்கு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு கிறது. மங்கலம்பேட்டை போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X