Advertisement

தற்காலிக கல்லூரி அமைச்சர் ஆய்வு

மாவட்ட செய்திகள் ஜூன் 26,2022 | 00:00 IST

Share

செஞ்சிப் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என சட்டசபையில் அமைச்சர் மஸ்தான் கோரிக்கை வைத்திருந்தார். இக்கோரிக்கையை ஏற்று சட்சபை தொடரில் செஞ்சியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . செஞ்சியில் 2022-2023ஆம் ஆண்டுக்கான அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையை தமிழக அறிவித்துள்ளது. இதையடுத்து தற்காலிகமாக அரசு கலைக்கல்லூரி அமைய உள்ள செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் மஸ்தான் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்லூரி மாணவர்கள் வந்து செல்ல போக்குவரத்து வசதிகள்,வகுப்பறை வசதிகள்,குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X