Advertisement

ஹெலி., விபத்து கிராமத்தில் ராணுவத்தினர் மருத்துவ முகாம்

மாவட்ட செய்திகள் ஜூன் 26,2022 | 20:24 IST

Share

நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், கடந்த ஆண்டு டிச., 8ல் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் இறந்தனர். மீட்பு பணிக்கு உதவிய கிராம மக்களுக்கு, வரும் ஓராண்டுக்கு, மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த ராணுவ உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இன்று, 6வது சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வெலிங்டன் ராணுவ மருத்துவமனை அதிகாரி லெப். ஜெனரல் வர்கீஸ் தலைமையில், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினர், மக்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்து, மருந்து வழங்கினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X