மாவட்ட செய்திகள் ஜூன் 27,2022 | 18:11 IST
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, திருமுருகன் பூண்டியில் நடராஜ் என்பவர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதில் எவ்வித சேதாரமும் இல்லை. பெட்ரோல் குண்டு வீசியவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்று நடராஜ் தெரிவித்தார். திருமுருகன்பூண்டி போலீசார் சிசிடிவி காட்சியை வைத்து பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் தேடி வருகின்றனர்
வாசகர் கருத்து