அரசியல் ஜூன் 28,2022 | 17:20 IST
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கோவிட் தொற்று உறுதியானது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 23ம்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இரண்டாக பிளவுபட்ட பிறகு, எடப்பாடி பழனிசாமி, கிரீன்வேஸ் சாலை வீட்டில்தான் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். எல்லா ஆலோசனைக் கூட்டங்களிலும் தவறாமல் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு கோவிட் தொற்று உறுதியானது. ஆஸ்பிடலில் அட்மிட் ஆனார். இதைத் தொடர்ந்து, எடப்பாடி வீட்டுக்கு வரும் ஆதரவாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி மனைவி ராதாவுக்கு தொற்று உறுதியானது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து