பொது ஜூன் 28,2022 | 17:50 IST
கோவை, இருகூரை சேர்ந்தவர் கிருஷ்ணன், வயது 40. கிருஷ்ணன் நேற்று கோவை கலெக்டர் ஆபிசில் நடைபெற்ற குறை தீர் கூட்டத்துக்கு சென்றார். சோர்வாக காணப்பட்ட கிருஷ்ணனிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. நீண்ட நாளாக பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு இருந்து வந்தது. சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். முறையாக விசாரிக்காமல் போலீசார் அலட்சியபடுத்தியதால் விஷம் குடித்தேன் என கூறினார். இதையடுத்து கிருஷ்ணனை போலீசார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். புகாரை முறையாக விசாரிக்காத எஸ்ஐ சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து