Advertisement

அமைச்சர் முன்னிலையில் அடிதடி திமுக பிரமுகர் சட்டை கிழிப்பு

அரசியல் ஜூன் 28,2022 | 18:16 IST

Share

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 10 ஒன்றிய பதவிகளுக்கான உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுத்தாக்கல் குன்றத்தூர் திருமண மண்டபத்தில் அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடந்தது. ரோஸ் நாகராஜன் என்பவர் திருப்போரூர் ஒன்றிய செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய வந்தார். முன்னாள் எம்எல்ஏ இதயவர்மனின் ஆதரவாளரும் மனு செய்ய வந்தனர். அப்போது, ரோஸ் நாகராஜனை இதயவர்மனின் ஆதரவாளர்கள் அடித்து உதைத்தனர். இதில் அவரது சட்டை கிழிந்தது. போலீசார் அவரை மீட்டுச் சென்றனர். அடிதடியால் ரோஸ் நாகராஜன் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை. கிழிந்த சட்டையுடன் சென்று குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X