மாவட்ட செய்திகள் ஜூன் 28,2022 | 21:39 IST
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மனச்சனப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம், அவரது உறவினர் சேகர், வயது 20, திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். இந்நிலையில் மலேசியாவில் வேலைக்கு சென்ற சேகர், ஊருக்கு வந்ததும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தாயிடம் கூறினார். போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் சேகர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு கரூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. சேகருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை, 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி நசிமா பானு உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து