பொது ஜூன் 30,2022 | 07:02 IST
காரைக்கால் திருநள்ளாறு அடுத்த அத்திப்படுகை கிராம வாய்க்காலில், தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். திருநள்ளாறு போலீசார், பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அத்திப்படுகை வடக்கு தெரு பகுதியை சேர்ந்த ரேணுகா என்பவருக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது. ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான ரேணுகா, தவறான உறவில் பிறந்த குழந்தைக்கு தானே வீட்டில் பிரசவம் பார்த்து வாய்க்காலில் வீசியதை ஒப்புக் கொண்டார். குழந்தை இறந்ததால் ரேணுகாவை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து